Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
ஹூஸ்டன்: அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியிட நாய் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இர்விங் நகர மேயர் தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வெஸ்டி என்ற இனத்தை சேர்ந்த நாய் சார்பில், அதன் உரிமை யாளர் மைக் ஹோவர்ட் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார். அந்த நாயின் பெயர் 'டைலான்'. வேட்பு மனுவில், 'பெண் நாய் வெஸ்டியின் மகன் டைலான்' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பார்த்த தேர்தல் அதிகாரி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். 

வேட்பு மனுவில் டெக்னிக்கல் குளறுபடி இருக்கிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் டைலான் பெயர் இல்லை. எனவே, மேயர் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்று கூறி பரிசீலனைக்கு ஏற்பதற்கு முன்பே அதிகாரி தள்ளுபடி செய்தார். இதையடுத்து பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மைக் ஹோவர்ட் கூறுகையில், 'இர்விங் நகரில் சில பிரச்னைகள் இருக்கிறது. அது பற்றி டைலானுக்கு சில கருத்துகள் உள்ளன' என்று தெரிவித்தார். கடந்த 1984ம் ஆண்டு முதல் மைக் ஹோவர்ட் அரசியலை கிண்டல் செய்து நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment