Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
லாரியஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கான போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் வீரர் ரஃபெல் நடால், கார்ப்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் முந்தைய ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரருக்கான விருதுக்கான போட்டியில் கால்பந்து வீரர் மெஸ்சி, பிரிட்டனைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் மோஃபரா, சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் சுன் யங், கூடைப் பந்து வீரர் லெப்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் விழாவில் விருது பெறும் வீரர்கள் அறிவிக்கப்படுவர். அதற்கு முன் இந்த மாத இறுதியில் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர்கள் பட்டியலை தேர்வுக் குழு வெளியிடும். அந்த தேர்வுக்குழுவில் விளையாட்டு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், விளையாட்டு கட்டுரை எழுதுபவர்கள், ஆன்-லைன் பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் இடம்பெற்றிருப்பர்.

0 comments:

Post a Comment