Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
மும்பை: அன்னிய மண்ணில் கடந்த 3 ஆண்டுகளாக அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருப்பது பற்றி இந்திய அணி கேப்டன் டோணி மற்றும் பயிற்சியாளர் பிளட்சரிடம் விசாரிப்பதற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி எழுந்து நிற்க முடியாத அளவுக்கு மரண அடி வாங்கி வருவதால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது. தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி வெற்றி வெறுங்கையுடன் நாடு திரும்பியது. 

கடைசியாக வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாத வெட்க்கக் கேடான நிலையை இந்திய அணி சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணி மீது முன்னாள் கேப்டன்கள் வரிந்து கட்டிக் கொண்டு தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். டோணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் வெறுக்கத்தக்க வகையில் உள்ளதாக சவுரவ் கங்குலி விமர்சித்தார். டோணியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பதவியை பறிக்க வேண்டும் என்று மொகிந்தர் அமர்நாத் வலியுறுத்தினார். இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கேப்டன் டோணி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்று தெரிகிறது. வருகிற 28-ந்தேதி புவனேஸ்வரில் நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளத

0 comments:

Post a Comment