Breaking News
Loading...
Wednesday 23 April 2014

Info Post

ஐதராபாத்
அல்லு அர்ஜூன், சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு திரைப்படம் ‘ரேஸ் குர்ரம் அல்லு அர்ஜுன், ஸ்ருதி ஹாசன் நடித்த ரேஸ் குர்ரம்  குடும்பம் பொழுதுபோக்கு படம்  தொடர்ந்து 2- வது வாரமாக  நன்றாக ஓடி வருகிறது. தெலுங்கில் முந்தைய படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்து உள்ளது
 கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் வெளிநாடுகளில் கடந்த 10 நாட்களில் கங்கானா ரெனாவத் நடித்த குயின், அமிதாப்பச்சன் நடித்த பூத் நாத் ரிட்டன் ஆகிய பாலிவுட் படங்களை விட நல்ல வசூலில் உள்ளது என கூறப்படுகிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜூன், சுருதிஹாசன், ஷ்யாம்,சலோனி,பிரகாஷ்ராஜ், மற்றும் ரவிகிஷன் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.,தமன் இசையமைப்பில் உருவான இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெறும் லுங்கி டான்ஸ் ஒன்று தற்போது ஆந்திரா முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் கவர்ச்சியின் எல்லையை தாண்டியிருந்தாலும், இவர் ஆடிய லுங்கி டான்சுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் சமீபத்தில் தெரிவித்த ஸ்ருதிஹாசன், "நான் பையனாக பிறந்திருந்தால் கண்டிப்பாக 24 மணிநேரமும் லுங்கியில்தான் இருந்திருப்பேன். லுங்கி எனக்கு மிகவும் பிடித்த உடை. துரதிஷ்டவசமாக பெண்ணாக பிறந்ததால் என்னால் லுங்கி அணிய முடிவதில்லை. ஆனால் எனது ஆசை ‘ரேஸ் குர்ரம் படத்தின் மூலம் நிறைவேறியது' என்று கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பல தியேட்டர்களில் இந்த லுங்கி டான்ஸ் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த லுங்கி டான்ஸ் ஷாருகானின் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம்  பிரபலமானது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment