Breaking News
Loading...
Wednesday 23 April 2014

Info Post
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
இடம்: ஷார்ஜா, நேரம்: இரவு 8 மணி
கேப்டன்கள்
கவுதம் கம்பீர் விராட் கோலி
நட்சத்திர வீரர்கள்
காலிஸ், மனிஷ் பாண்டே, உத்தப்பா, ஷகிப் அல்–ஹசன், மோர்னே மோர்கல், நரின்
கெய்ல், டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங், பார்த்தீவ் பட்டேல், ஸ்டார்க், அல்பி மோர்கல்
இதுவரை நேருக்கு நேர் 12
வெற்றி 6 வெற்றி 6
--–
‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி பெங்களூர்?
தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தவிடுபொடியாக்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் நொறுக்கியது. இத்தனைக்கும் பெங்களூர் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், முதுகுவலி பிரச்சினையால் இந்த இரு ஆட்டத்திலும் விளையாடவில்லை. இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் இன்றைய ஆட்டத்திற்கு உடல்தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றியை குறி வைத்திருக்கும் பெங்களூர் அணிக்கு அவரது வருகை மேலும் புத்துணர்வை அளிக்கும். பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் பெங்களூர் அணி வலுவாக திகழ்கிறது. மிட்செல் ஸ்டார்க், அல்பி மோர்கல், வருண் ஆரோன், இன்னும் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காத சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார்கள்.
அதே சமயம் தொடக்க ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2–வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் பணிந்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்சின் வெற்றிப்பயணத்திற்கு அணை போடுவதற்கான வியூகங்களை தீட்டி வரும் கொல்கத்தா அணியில் சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த ஐ.பி.எல். சீசனில் ரன் கணக்கை தொடங்காத கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் இரு ஆட்டத்திலும் டக்–அவுட் ஆனார். இதே போல் நீண்ட காலமாக தடுமாறி வரும் யூசுப் பதான் தன் மீது அணி வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மற்றபடி ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, காலிஸ் நல்ல பார்மில் இருக்கிறார்கள். பந்து வீச்சில் மோர்னே மோர்கல், சுனில் நரின், வினய்குமார், ஷகிப் அல்–ஹசன் கலக்கக்கூடியவர்கள். கொல்கத்தா அணி ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் சவாலான பெங்களூர் அணியை ஒரு கை பார்க்கலாம்.
(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்சர்– சோனி செட்மேக்ஸ்)
--–
‘காலிஸ் போல் ஆகணும்’
‘அதிரடியில் பின்னியெடுக்கக்கூடிய ஷேவாக், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஜார்ஜ் பெய்லி போன்ற பேட்ஸ்மேன்கள் எங்கள் அணியில் உள்ளனர். அவர்களால் பந்தை அதிக தூரத்திற்கு விரட்டியடிக்க முடியும். இன்னொரு முனையில் நிலைத்த நின்று விளையாடுவதே எனது வேலை. சீராக ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்து ஒத்துழைப்பு கொடுப்பதும், பவுண்டரி அடிப்பதும், வாய்ப்பு கிடைக்கும் போது பந்தை சிக்சருக்கும் தூக்குவது தான் திட்டம். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நா£ன் அறிமுகம் ஆன போது அதற்குரிய தொப்பிய வழங்கியதில் இருந்து ஷேவாக் தான் எனக்கு வழிகாட்டி. ஐ.பி.எல். குறித்து அவரிடம் நான் நிறைய பேசுகிறேன். உண்மையிலேயே அவர் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
மேக்ஸ்வெல், மில்லர் போன்று என்னால் அதிரடியாக விளையாட முடியாது. ஆனால் கிரிக்கெட்டிக்குரிய சரியான ஷாட்டுகளை அடிப்பதில் கில்லாடியான காலிஸ் (தென்ஆப்பிரிக்க ஆல்–ரவுண்டர்) போன்று எப்போதும் விளையாட விரும்புகிறேன். இருப்பினும் இன்னும் ரன்கள் குவித்து எனது ஸ்டிரைக்–ரேட்டை உயர்த்துவது முக்கியம். அது தான் எனது இலக்கு’
–கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் புஜாரா

0 comments:

Post a Comment