Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
நெல்லை: நெல்லையில் மனைவி, மகளுடன் தொழிலதிபர் காருக்குள் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். பாளையங்கோட்டை ரவிசங்கர் நகரைச் சேர்ந்த கான்ட்ராக்டர் சுடலைமுத்து மகன் பரிபூரணம் என்கிற கண்ணன் (40). கான்ட்ராக்ட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு மல்லிகா (33) என்ற மனைவியும், சுமதி (13) என்ற மகளும் இருந்தனர். சுமதி அரியகுளத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கண்ணன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். தன்னிடம் இருந்த ரூ.2 கோடியை பைனான்ஸ் தொழிலில் முதலீடு செய் தார். இவரிடம் பிளாட் வாங்குவதற்காக அக்கம் பக்கத்தினர் கொடுத்த பணத்தையும் பைனான்சில் போட்டிருந்தார். ஆனால், இவரிடம் பணம் வாங்கியவர்கள் ஒழுங்காக வட்டி கொடுக்காததுடன், முதலையும் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், மற்றவர்களிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் திணறினார். இதற்கிடையில், கண்ணன் நடக்க முடியாமல் ஊனமடைந்தார்.
ஏரலைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் கண்ணனிடம் பல லட்சம் வாங்கியுள்ளனர். 

லட்சுமணன் குடும்பத்தினர் கண்ணன் மீது கந்து வட்டி கேட்டு டார்ச்சர் செய்வதாக ஏரல் போலீசில் புகார் செய்தனர். ஏரல் போலீ சார் நேற்று கண்ணனை விசாரணைக்காக அழைத்தனர். இதனால், வேதனை யடைந்த கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை மனைவி மல்லிகாவிடமும் தெரிவித்து, அவரது ஒப்புதலையும் பெற்றார். நேற்று மதியம் சுமதி பள்ளியில் இருந்து திரும்பி வந்ததும், 3 பேரும் கண்ணனின் சொந்த ஆம்னி காரில் கோயிலுக்கு போவதாக அக்கம் பக்கத்தினருடன் கூறிக்கொண்டு புறப்பட்டனர். காரில் கேஸ் சிலிண்டர் வசதி இருந்தது. மேலும், தன் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரையும் எடுத்து வைத்துள்ளார்.  விஎம் சத்திரம் திருச்செந்தூர் ரோட்டில், ஆச்சிமடம் அருகே காட்டுப்பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார். 

காரை நிறுத்தி கண்ணாடிகளை ஏற்றி விட்டு, சிலிண்டரை திறந்து தீ வைத்ததாக தெரிகிறது. இதில் பயங்கர சப்தத்தில் சிலிண்டர் வெடித்து காரும் சிதறியுள்ளது. இதில், கண்ணன், மல்லிகா, சுமதி ஆகிய 3 பேரும் உடல் கருகி காருக்குள் இருந்தபடியே பரிதாபமாக இறந்தனர்.  அக்கம், பக்கத்தினருக்கு பாதிப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக கண்ணன் காட்டுப்பகுதியில் காரை நிறத்தி சிலிண்டரை வெடிக்கச் செய்துள்ளார். போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் யார் யார் தன்னை ஏமாற்றினார்கள் என்ற முழுவிவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment