Breaking News
Loading...
Monday 28 April 2014

Info Post
இது கதிர்வேலன் படத்தின் தோல்வியை அடுத்து அவசரமாக ஒரு ஹிட் கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் இருக்கிறார் உதயநிதி. அதற்காக நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு அடுத்ததாக தனக்கு தோல்விப்படம் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த முறை பிரபாகரன், உதயநிதிக்காக பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் ஒன்றை பிடித்து அதற்கான டிஷ்கஷனில் தீவிரமாக இருக்கிறார்.
இதில் உதயநிதியின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இது வில்லேஜ் படம் என்பதால் சந்தானத்தை கழற்றி விட்டுவிட்டு சூரியை காமெடியனாக தன் படத்தில் களம் இறக்குகிறார் உதயநிதி.
கிராமத்து படம் என்றாலே பொள்ளாச்சி, தேனி, திருநெல்வேலி, மதுரை ஏரியா என்பதை மாற்றி திருவாரூர், நாகப்பட்டினம் ஏரியாவில் கதை பிடிக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

0 comments:

Post a Comment