Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
போர்ட் எலிசபத்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை பெற்றுள்ளது. போர்ட் எலிசபத், செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 423 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. எல்கர் 83, டுபிளெஸ்சிஸ் 55, டிவில்லியர்ஸ் 116, டுமினி 123 ரன் விளாசினர். இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று 246 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. வார்னர் 70, ஸ்டீவன் ஸ்மித் 49, ஜான்சன் 27, ஹாரிஸ் 26 ரன் எடுத்தனர். சிடில் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பிலேண்டர், மார்க்கெல் தலா 3, பார்னெல் 2, ஸ்டெயின், டுமினி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 177 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 42 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஹாஷிம் அம்லா 83 ரன் (106 பந்து, 11 பவுண்டரி), டி காக் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்ரிக்க அணி 450 ரன்னுக்கும் அதிகமாக முன்னிலை பெறுவது உறுதி என்பதால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்டில் வென்ற ஆஸி. அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment