Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்ததில் 15 ஏக்கரில் நெற்பயிர் சேதமடைந்தது. அறுவடை பருவத்தில் பயிர் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. புலிகள் காப்பகத்தில் களக்காடு அருகே புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு, சேரன்மகாதேவி அருகே கூனியூர், காருக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல், தெற்குபாப்பான்குளம்,
ஜமீன்சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம் அருகே கருத்தையாபுரம், ஞானியார்தோப்பு, திருப்பதியாபுரம், அனவன்குடியிருப்பு, ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம், கீழஆம்பூர் உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் காட்டுப் பன்றிகள், எருமை, செந்நாய், சிறுத்தை, யானை போன்ற விலங்கினங்கள் அட்டகாசம் இருந்து வருகிறது.
கடையம், ஆழ்வார்குறிச்சி அருகே காட்டு எருமை, செந்நாய் அட்டகாசம் செய்து ஆடு போன்ற கால்நடைகளை கொன்று வருகிறது. களக்காடு அருகே புலவன்குடியிருப்பு பகுதி, பொட்டல், மாஞ்சோலை, மணிமுத்தாறு பகுதியில் காட்டு யானைகளும், விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு, திருப்பதியாபுரம், ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பகுதியில் சிறுத்தை அட்டகாசம் இருந்து வருகிறது.
வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் விளைப் பொருட்கள் பெருமளவில் சேதம் அடைந்து வருகிறது. மேலும் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். விலங்கினங்கள் அட்டகாசம் செய்வதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வனத்துறை இழப்பீடு வழங்கி வருகிறது.
இதனிடையே அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், தெற்குபாப்பான்குளம், மணிமுத்தாறு பகுதியில் மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கடந்த 3 தினங்களாக 8 யானைகளும் ஒரு குட்டியும் அட்டகாசம் செய்து வருகிறது. கூட்டமாக வந்த யானைகள் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, தெற்குபாப்பான்குளம் பகுதியில்  நெற்பயிரை அழித்து சேதப்படுத்தியுள்ளது.
அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிரை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு்ள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மணிமுத்தாறு அருகே வழுக்கம்பாறை மொட்டை என்ற பகுதிக்கு வந்த யானைகள் வயலுக்குள் இறங்கி அட்டகாசம் செய்தது. தோட்டத்தில் நின்ற பனைகளையும் பிடுங்கி சேதப்படுத்தியதாக ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த விவசாயி இசக்கி தெரிவித்தார்.
தெற்குபாப்பான்குளத்தை சேர்ந்த நல்லசிவன், சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த இசக்கி, முருகன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கரில் நெற்பயிர் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அட்டகாசம் செய்து வரும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment