Breaking News
Loading...
Thursday 1 May 2014

Info Post
ளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய இணையதளத்தில் கேடு விளைவிக்கும் சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை ஆபாச வலைத்தளங்கள்.
இத்தகைய வலைத்தளங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. அந்தவகையில் சீனாவும் தங்கள் நாட்டில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் அங்கு நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பட்டு வருகின்றன.இவற்றை மீண்டும் தடை செய்யும் நோக்கில், வலை துய்மை - 2014 என்ற பெயரில் திட்டம் ஒன்றை சீனா வகுத்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஆபாச சமூக வலைத்தளங்களும் மூடப்பட்டன.
Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment