Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
கடந்த சில தினங்களுக்கு முன் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவுக்கு சென்றார்.   வருகிற ஏப்ரல் மாதம் ஸ்டேடியர் நெகராவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அதற்காக அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது., 
அப்போது தனது ஏப்ரல் மாத இசை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேச விரும்பினாராம். ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர் சந்திப்பு என்பதால்  அங்கிருக்கும் எல்லா மொழி பத்திரிகையாளர்களும் குவிந்துவிட்டார்களாம்.
எல்லா மொழீ செய்தியாளர்களுடன் பேச வேண்டும். என்கிற ஆசை அவருக்கு இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சொதப்பலால் அவரால் தமிழ் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிருப்திக்குள்ளான தமிழ் பத்திரிகையாளர்கள் ஒரு தமிழரான ரஹ்மான் தமிழ் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லாமல் மற்ற மொழி ஊடகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது துரதிருஷ்டவசமானது என்று கவலையுடன் முணுமுணுத்தார்களாம். ஒரு சில தமிழ் ஊடகங்கள் இந்த புறக்கணிப்பை செய்தியாகவே வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவக்கின்றன.
ஆஸ்கர் விருதை கைகளில் வாங்கிக் கொண்டு தமிழில் பேசியவர் ஏ. ஆர். ரஹ்மான். உலக அரங்கில் தமிழ் மொழிக்கு அவர் தந்த மரியாதைதான் அது. இந்த நிலையில் நிகழச்சி ஏற்பட்டாளர்களின் சொதப்பல்களால் தமிழ பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்பது மட்டும் உண்மை.

0 comments:

Post a Comment