Breaking News
Loading...
Thursday 1 May 2014

Info Post

வாஷிங்டன்
ஆண்களின் ரத்த செல்களில் ஒய் குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கேன்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 'ஒய் குரோமோசோம்' செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை பிரிட்டனில் உப்சலா பல்ககைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி.என்.ஏ (D.N.A.)  உள்ளன.
ரத்த மாதிரி சோதனை உலக அளவிலான ஆராய்ச்சியார்கள் குழு ஒன்று வயது முதிர்ந்த ஆண்கள் 1600 பேரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர்.
ஒய் குரோமோசோம் ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் ஒய் குரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 இந்தியாவில் கேரள கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான் மிக அதிகமாக 77.2 வயது வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் ‘ஒய்' குரோமோசோம் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக எதிர்காலத்தில் ஆண்குலமே அழிந்துபோகும் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.
 ஆண் குரோமோசோம் எனப்படும் ‘ஒய்' குரோமோசோம்களுக்குள் உள்ளேயே உள்ள அழியும் தன்மையால் ஆண்கள் நிரந்தர அழிவை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியை கிரேவ்ஸ்
பெண்களின் எக்ஸ் குரோமோசோம் ஜோடியாக உள்ளதால் அதனால் பழுதுகளைச் சரிசெய்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜோடியில்லாத ஆணின் ‘எக்ஸ்' குரோமோசோம் பழுதுகள், குறைகளை சரிசெய்யத் தவித்து கடைசியில் அழிகிறது.
ஆண் குழந்தைக்குக் காரணமான ‘ஒய்' குரோமோசோம் முற்றிலுமாக அழிந்து போவது என்றாலும் 50 லட்சம் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
 

0 comments:

Post a Comment