Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
செவ்வாய் கிரகத்தில் நீர்படிமங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் பற்றி ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை நாசா அனுப்பியுள்ளது. அவை அண்மையில் அனுப்பிய புகைப்படங்களில், செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நீர் படிமங்களுக்கு ஆரசம் என்று பெயரிட்டுள் நாசா கோடை காலங்களில் இவை உருகுவதாகவும், குளிர் காலங்களில் உடிறந்து போவதாகவும் தெரிவித்தள்ளது. இந்த நீர் படிமங்கள் பற்றி நாசாவின் ஒடிசி என்ற செயற்கைக்கோள் ஆய்வு செய்ததில் இரும்பு தாதுக்கள் அதிகளிவில் இருப்பது கண்டுபிடிக்கப்பபட்டது. இவை தவிர உப்பு தன்மை இல்லாத நீர் படிமங்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நீர்படிமங்கள் அதிகளவில் இருக்கக்கூடும் என்றும், செவ்வாயின் புறச்சூழல் காரணமாக அவை முழுவதுமாக வெளிப்படவில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளர். செவ்வாயில் உயிர்வாழ சாத்தியம் உள்ளதா என்று நெடுங்காலமாக ஆய்வு நடக்கும் நிலையில் அங்கு நீர் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

0 comments:

Post a Comment