Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு இதுவரை 77 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன
இதேவேளை 5 ரூபாய் நாணயம் போன்ற தடையப்பொருள் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 28 ஆவது தடவையாக இன்று  குறித்த மனித புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 69 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மனித புதைகுழி விரிவு படுத்தப்பட்டு தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட புதைகுழிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு புதை குழி விரிவு படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதை குழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் நாளை சனிக்கிழமை 29 ஆவது தடவையாக மன்னார் நீதவான்   முன்னிலையில் இடம்பெறவுள்ளது

0 comments:

Post a Comment