Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
வானியல் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருந்து 22 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் முன் எப்போதும் பார்த்திராத விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜன் ஆறு கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment