Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
வால்பாறை: வால்பாறை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிர் இழந்தார். வால்பாறையை அடுத்து உள்ளது நல்லமுடி எஸ்டேட். இப்பகுதியில் உள்ள வனத்தில் வனத்தீதடுப்பு கோடுகள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 10 பேரும், வனத்துறை ஊழியர் ஒருவரும் சேர்ந்து தீத்தடுப்பு கோடுகள் வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 10.45 மணி அளவில் நல்லமுடி சிலுவை மேடு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் பணியில் இருந்த அனைவரையும் விரட்டின. யானைகளை கண்ட அனைவரும் ஓடி தப்பி ஓடினர். ஆனால் கருப்பையா (52)என்ற தொழிலாளியை காணவில்லை. தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்ததால் கருப்பையாவை தேட முற்பட்டும் பயனில்லை. 

இந்நிலையில் வால்பாறை என்.சி.எப் யானை ஆராய்ச்சியாளர்கள் காட்டிற்குள் வனத்துறையிருடன் சென்று தேட ஆரம்பித்தனர். மாலை 4 மணியளவில் தேட துவங்கியவர்கள் 5 மணி அளவில் கருப்பையா உடலை சிதைந்த நிலையில் மீட்டனர். யானையால் மிதிபட்டு உடல் நசுங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை பார்த்து அப்பகுதி மக்கள் கதறி அழுதனர். கருப்பையாவுக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் அறிவொளி, மற்றும் வால்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment