Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் முன்னேறினார். இருப்பினும், முதுகு வலியில் இருந்து இன்னும் பூரண குணமடையவில்லை என அவர் தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டீ ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நடாலும், அதே நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் மாண்டனெஸýம் மோதினர்.
ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுக்கு எதிரான ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றின் போது முதுகுவலியால் அவதிப்பட்டிருந்த நடால் சிகிச்சைக்குப் பின் களமிறங்கும் முதல் போட்டி இது. காயத்தில் இருந்து மீளாததால் கடந்த வாரம் நடைபெற்ற பினோஸ் ஏர்ஸ் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரியோ ஓபனில் பங்கேற்றார். 74 நிமிட போராட்டத்துக்குப் பின் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். இருப்பினும் நடால் முதுகு வலியில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பது, அவர் இடுப்பில் எலாஸ்டிக் டேப்பைச் சுற்றிக் கொண்டு விளையாடியபோதே தெரிந்தது.
"கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் காயம் அடைந்து, இரண்டரை வார ஓய்வுக்குப் பின் மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. இன்னும் லேசாக முதுகு வலி உள்ளது. இருப்பினும் இங்கு விளையாட முடிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என நடால் தெரிவித்தார்.
காலிறுதியில் நடால், தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள போர்ச்சுகலைச் சேர்ந்த ஜாவோ செüசாவை சந்திக்க உள்ளார். 2-வது சுற்றில் ஜாவோ, ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோûஸ 7-6 (8/6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
மற்ற ஆட்டங்களில் இத்தாலியன் ஃபேபியோ ஃபோக்னி, உக்ரைனின் டொல்கோபோலோவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
செரீனா - ஜான்கோவிச் வாக்குவாதம்
துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸýம், செர்பியாவைச் சேர்ந்த ஜெலினா ஜான்கோவிச்சும் மோதினர். இதில் செரீனா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். செரீனா வெற்றிபெறும் தருணத்தில் இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். கடந்த ஆண்டு இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற டபிள்யு.டி.ஏ. சாம்பியன்ஷிப் போட்டியின்போதும் இருவரும் களத்தில் மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment