Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
லாகூர் : ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது. பாகிஸ்தான் அதிரடி ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி காயம் அடைந்தார். கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் வீசிய பந்தை அப்ரிடி அடித்தபோது, மட்டையில் பட்டு எகிறிய பந்து தாடையை பதம் பார்த்தது.பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் தாடையை அதிகம் அசைக்க கூடாது, குறிப்பாக இரண்டு நாட்களுக்கு அவர் கண்டிப்பாக பேசக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அப்ரிடி காயம் அடைந்துள்ளது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment