Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
இப்போது பரவலாக மக்களால் கையாளப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்களில் பெரும்பாலானவை ஊறு விளைவிப்பவை என்று தெரியவந்துள்ளது. 2014 ஜனவரியில் காஸ்பர்ஸ்கை லேப் எனும் ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் ஆய்வு செய்ததில் சுமார் 2 லட்சம் மொபைல் மால்வார்களை அது கண்டறிந்தது. அதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் நவ.2013 ஐ விட 34% அதிகரித்துள்ளது இந்த எண்ணிக்கை. அப்போது 1,48,000 மால்வேர்கள் இருந்தது தெரியவந்தது.
இப்போதெல்லாம் இணையவழி மோசடிக்காரர்கள் மொபைல் மார்க்கெட்டைக் குறிவைத்து இயங்குவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான ஊறு விளைவிக்கக் கூடிய ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் தற்போது 10 மில்லியன் என்ற அளவைத் தொட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment