Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
ஒடிசா: இந்தியாவில் இன்று பலாசோர் பகுதியை அடுத்த சாந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஏவுதல் வளாகத்தின் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரையில் இருந்து விண்வெளிக்கு பாய்ந்து தாக்கும் ‘ஆகாஷ்’ ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. ‘லக்‌ஷயா’ என்ற ஆளில்லா விமானத்தின் உதவியுடன் தொங்க விடப்பட்ட மிதக்கும் இலக்கினை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆகாஷ் ஏவுகணை 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து 18 கி.மீ. உயரத்தில் சென்று 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் வீழ்த்தும் அதிநவீன ஆற்றல் படைத்துள்ளது. இது 30 கிமீ அப்பால் வரை இலக்கு வைக்கும் திறனை கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment