Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
போர்ட் எலிசபத்தில் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 231 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. 448 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 4வது நாளில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீரர்கள் ரோஜர்ஸ் - வார்னரின் அதிரடி ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தபோது எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னணி பந்துவீச்சாளர்கள் சோர்ந்துபோன நிலையில், வார்னர் விக்கெட்டை டுமினி கைப்பற்றியது தென் ஆப்ரிக்காவுக்கு புது உற்சாகம் கிடைத்தது. குறிப்பாக, ஸ்டெயினின் அனல் பறந்த வேகப்பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, ஆஸி. அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ரோஜர்ஸ் (107 ரன்), வார்னர் (66 ரன்) பங்களிப்பு 173 ரன் போக, 3வது அதிகபட்சம் உதிரிகளாகக் கிடைத்த 21 ரன் தான்.

மற்ற 9 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து எடுத்தது வெறும் 22 ரன் மட்டுமே. ஸ்டெயின் 4 விக்கெட் சாய்த்து அசத்தினார். டுமினி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். முதல் டெஸ்டில் தோற்று பின்தங்கியிருந்த தென் ஆப்ரிக்கா, 2வது டெஸ்டில் எல்லா வகையிலும் ஆஸி. அணியை திணறடித்து நம்பர் 1 அந்தஸ்துக்கு தகுதியான அணி என்பதை நிரூபித்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது.

0 comments:

Post a Comment