Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் காரணமாக 40 அடி நீளமுள்ள 14 டன் சிகரெட் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் கரை ஒதுங்கியது. இங்கிலாந்தில் பிப்ரவரி 14ம் தேதி பெய்த கடுமையான புயல் மற்றும் மழை வடக்கு கடற்கரையை தாக்கியது. இதில் தேவோன் கடற்கரை பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளானது. இதனால் கடல் நீர் கரைக்குள் நீண்ட தூரத்திற்கு புகுந்தது. இந்நிலையில் கடலின் மற்றொரு பகுதியில் இருந்த ஏராளமான கன்டெய்னர்களை கடல் அலை இழுத்து வந்து இப்பகுதியில் கரையில் வீசியது.

இதில் பெரும்பாலான கன்டெய்னர்கள் காலியாகவே காணப்பட்டன. 40 டன் நீளமுள்ள கன்டெய்னர் ஒன்று மட்டும் 14 டன் சிகரெட் பெட்டிகளுடன் கரை ஒதுங்கியது. இதனால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். மேலும் அவற்றை யாரும் இலவசமாக பொறுக்கி எடுத்து செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஆனால் கன்டெய்னர்கள் காலியாக உள்ளன என்று அறிவித்த போதிலும் அவற்றில் ஏதாவது இருக்கலாம் என கருதி அதனை எடுக்க கடலுக்குள் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment