Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post
கோலாலம்பூர்,
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8ந்தேதி மாயமானது.  அதில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகள் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.  இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.
புளூபின் 21
இந்த மீட்பு பணியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமான படை தளபதியான ஆங்கஸ் ஹூஸ்டன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.  தற்பொழுது விமானத்தை தேடுவதற்காக ரோபோ வாகனம் புளூபின் 21 பயன்படுத்தப்பட்டு உள்ளது.  நேற்றிரவு தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்ட இந்த வாகனம் 6 மணிநேரம் கடலுக்கு உள்ளே சென்று தேடுதலில் ஈடுபட்டது.
அதில் இருந்து கிடைத்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.  அதன் பின்பு பருவநிலை சாதகமாக காணப்பட்டவுடன் மறுபடியும் வாகனம் நீருக்கு உள்ளே சென்று தேடுதல் பணியில் ஈடுபடும்.

சாதகமான பருவநிலை
இந்த பணியில் 11 விமானங்கள் மற்றும் 11 கப்பல்கள் ஆகியவை இன்று ஈடுபடுகின்றன.  பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,100 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெறும் இந்த தேடுதல் பணி குறித்து, மீட்பு பணியின் ஒருங்கிணைப்பாளர் ஆங்கஸ் ஹூஸ்டன் கூறும்போது, நீருக்குள் மூழ்கி தனியாக தேடுதலில் ஈடுபடும் திறன் கொண்ட புளூபின் 21 வாகனம் ஆனது கடல் பரப்பில் 3டி சோனார் வரைபடத்தை உருவாக்க கூடியது.
கடைசியாக கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் கிடைத்த பகுதியில் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டு உள்ள புளூபின் கடலுக்கு உள்ளே 4,500 மீட்டர்கள் ஆழத்திற்கு செல்லும் திறன் படைத்தது.
சக்தி வாய்ந்த சோனார்களை கொண்டுள்ள இது 20 மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட கூடியது.  விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் காணப்பட்டால் சோனார் அலைகள் பட்டு கேமிராக்கள் செயல்பட தொடங்கும்.  ஒளி அலைகள் அதன் மீது பாய்ச்சப்பட்டு பொருளை பதிவு செய்ய தொடங்கும்.  இன்றைய தேடுதல் பணியில் சாதகமான பருவநிலையை அடுத்து புளூபின் 21 மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபடும் என்று ஆங்கஸ் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment