Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post

லண்டன்,
இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக லண்டனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் கிங் கல்லூரி பேராசிரியர்கள், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவ மைய பேராசிரியர்கள் உதவியுடன் இந்த ஆய்வு அறிக்கையை தயாரித்துள்ளனர்.
அதில், புகை பிடித்தல், புற்றுநோயை தாமதமாக கண்டறிதல், சிகிச்சை பெற வசதி இல்லாமை போன்றவற்றால் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுவதாகவும், சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணம் அடைந்து வருவதாகவும், இந்த சாவு எண்ணிக்கை 2035–ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 12 லட்சமாக உயரும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
95 சதவீத இந்திய மருத்துவ கல்லூரிகளில் விரிவான புற்றுநோய் மருத்துவ வசதி இல்லை என்றும், புற்றுநோய் சிகிச்சை வசதிகள் மற்ற நாடுகளைவிட பின்தங்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment