Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post

கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற ஹாலிவுட் பொருட்கள் ஏலத்தில், மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் காதணி ரூ.1.11 கோடிக்கு விலை போனது.
வெள்ளி காதணி
கடந்த 1955ம் ஆண்டு தி ரோஸ் டாட்டூ என்ற பெயரிலான படம் திரைக்கு வந்தது.  டென்னஸ்ஸீ வில்லியம்ஸ் படைப்பில் உருவான கதையின் பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்த அதன் முதல் காட்சியில் மன்றோ இந்த காதணியை அணிந்து வந்தார்.
இது வெள்ளியால் உருவாக்கப்பட்டது.  ஏலத்தில் ஹம்ப்ரி போகர்ட் பயன்படுத்திய லைட்டர் ரூ.11.55 லட்சத்திற்கும், பேவாட்ச் புகழ் நடிகரான டேவிட் ஹேசல்ஹாப் பயன்படுத்திய 1986-பான்டியாக் பைர்பேர்டு ரக கார் ஒன்று ரூ.91.83 லட்சத்திற்கும் விலை போனது.

0 comments:

Post a Comment