Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post

புளோரிடா,
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தின் மெக்டொனால்டு ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலில், இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தெரியும்.
சந்திர கிரகணம்
இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும்.  பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும்.  இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும்.  இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும்.
வளிமண்டலத்தில் காணப்படும் எரிமலை துகள்கள் மற்றும் பிற வாயுக்களின் அளவை கொண்டு நிலவின் நிறம் மாறுபடும்.  சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆனது வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஏற்படும்.  அமெரிக்காவில் இன்று ஏற்படும் சந்திர கிரகணம் அதன் பின்பு வருகிற 2019ம் ஆண்டு தான் தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசா ஏற்பாடு
எனினும், நியூ இங்கிலாந்து மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான நாடுகறில் இந்த கிரகணம் தெரியும்.  இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக காண்பதற்கு வசதியாக திட்டமிட்டுள்ள நாசா நிறுவனம் அதற்காக நாசா டி.வி. மற்றும் நாசா.கவ் (NASA.gov) இணையதளம் ஆகியவற்றின் வழியாக அதனை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.
இதனை தவிர்த்து ஜார்ஜியா மாகாணத்தின் கொலம்பஸ் மாநில பல்கலை கழகத்தில் அமைந்துள்ள கோகா கோலா அறிவியல் மையம் மற்றும் ஸ்லூ.காம் (Sloo.com) ஆகிய இணையதளங்கள் வழியாகவும் நேரடியாக சந்திர கிரகணத்தை காணலாம்.

0 comments:

Post a Comment