Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்



டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த மாதம்தான் பெட்ரோல் விலையைக் குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருவதால் பெட்ரோல் விலைக் குறைப்பு தொடர்பாக அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கோரியிருந்தன. கடந்த மாதம் பெட்ரோல் விலையைக் குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று பெட்ரோல் விலையைக் குறைதது அறிவிப்பு வெளியாகியுள்ளது. லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறதாம்.


0 comments:

Post a Comment