Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post

நியூயார்க்,
அமெரிக்காவில் பிறந்த நாள் விழாவில் விளையாடிய போது 5 வயது சிறுவன் ஒருவன் தற்செயலாக துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டதில் 7 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.
தெற்கு கலிபோர்னியாவின் காஸ்தோனில் உள்ள வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது சிறுவனின் தாயின் ஆண் நண்பர் கொண்டுவந்த துப்பாக்கியை சிறுவன் எடுத்துள்ளான். அப்போது துப்பாக்கிக்குள் தோட்டாக்கள் இருந்துள்ளது. அதனை விளையாட்டு துப்பாக்கி என்று எண்ணி சிறுவன் காரை நோக்கி விளையாட்டுத் தனமாக சுட்டுள்ளான். இதனையடுத்து துப்பாக்கி குண்டு அங்கிருந்த சிறுமியின் மார்பில் பாய்ந்தது. மற்றொரு சிறுவனும் இதில் காயம் அடைந்துள்ளான். உடனடியாக காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்போது மருத்துவர்கள் சிறுமி பலியாகிவிட்டார் என்று தெரிவித்துவிட்டனர்.
மேலும், சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment