Breaking News
Loading...
Friday 25 April 2014

Info Post
ராஜஸ்தான் ராயல்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
இடம்: அபுதாபி, நேரம்: மாலை 4 மணி
கேப்டன்கள்
ஷேன் வாட்சன் விராட் கோலி
நட்சத்திர வீரர்கள்
ரஹானே, சாம்சன், ஸ்டீவன் சுமித், பவுல்க்னெர், டிம் சவுதி
யுவராஜ்சிங், டிவில்லியர்ஸ், ஸ்டார்க், பார்த்தீவ் பட்டேல், வருண் ஆரோன்
இதுவரை நேருக்கு நேர் 11
வெற்றி 5 வெற்றி 6
இவ்விரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் களம் இறங்கும். டெல்லி, மும்பைக்கு எதிராக தொடர்ந்து இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி நேற்று முன்தினம் 2 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்று போனது. இதில் கிறிஸ் லின்னின் பிரமாதமான கேட்ச்சும், கடைசி நேரத்தில் யுவராஜ்சிங்கின் (34 பந்தில் 31 ரன்) தடுமாற்றமும் பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பெங்களூர் அணியின் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் இந்த சீசனில் இன்னும் தரிசனம் கொடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்திலும் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
அதே சமயம் ஐதராபாத்துக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளிடம் மண்ணை கவ்வியது. பலம் வாய்ந்த பெங்களூருக்கு எதிராக ஒருங்கிணைந்து எழுச்சி பெறுவதற்கான வியூகங்களை ராஜஸ்தான் அணி வகுத்து வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இடம்: அபுதாபி, நேரம்: இரவு 8 மணி
கேப்டன்கள்
கவுதம் கம்பீர் ஜார்ஜ் பெய்லி
நட்சத்திர வீரர்கள்
காலிஸ், உத்தப்பா, மனிஷ் பாண்டே, சுனில் நரின், மோர்னே மோர்கல்
மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஷேவாக், புஜாரா, பாலாஜி, ஜான்சன்
இதுவரை நேருக்கு நேர் 11
வெற்றி 6 வெற்றி 5
இந்த ஐ.பி.எல். தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளை வரிசையாக தூக்கி சாப்பிட்ட பஞ்சாப் அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் வரிந்து கட்டி நிற்கிறது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஆணிவேராக இருப்பவர் கிளைன் மேக்ஸ்வெல் தான். 95, 89, 95 என்று 17 சிக்சருடன் 279 ரன்கள் குவித்து இருக்கும் மேக்ஸ்வெல்லின் ஜூரம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தால், நிச்சயம் கொல்கத்தாவின் நிலைமை திண்டாட்டம் தான். மேக்ஸ்வெல்லுடன், டேவிட் மில்லரும் இரண்டு அரைசதங்களை எடுத்திருப்பதும், ஷேவாக் அணியில் அங்கம் வகிப்பதும் கவனிக்கத்தக்கது.
2–வது வெற்றி (மும்பை, பெங்களூருக்கு எதிராக), ஒரு தோல்வி (டெல்லிக்கு எதிராக) கண்டுள்ள கொல்கத்தா அணியும் லேசுப்பட்டது அல்ல. எல்லா வகையிலும் ஈடுகொடுத்து விளையாடக்கூடிய அளவுக்கு திறமையான வீரர்களை கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அணியில் கேப்டன் கவுதம் கம்பரின் பார்ம் தான் கவலைக்குரியதாக இருக்கிறது. முதல் 3 ஆட்டங்களிலும் ரன் ஏதுமின்றி டக்–அவுட் ஆகி இருக்கும் கம்பீருக்கு, இப்போது முதல் ரன்னை எடுப்பது தான் பெரும் சவாலாக இருக்கும்.
(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்–சோனி செட்மேக்ஸ்)
--–
ஐ.பி.எல். புள்ளி பட்டியல்
அணி ஆட்டம் வெற்றி தோல்வி புள்ளி
பஞ்சாப் 3 3 0 6
சென்னை 3 2 1 4
பெங்களூர் 3 2 1 4
கொல்கத்தா 3 2 1 4
ராஜஸ்தான் 3 1 2 2
டெல்லி 4 1 3 2
ஐதராபாத் 3 1 2 2
மும்பை 2 0 2 0
(குறிப்பு: ஐதராபாத்–டெல்லி ஆட்டம் வரை)

0 comments:

Post a Comment