Breaking News
Loading...
Friday 25 April 2014

Info Post
இந்தியாவின் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரத்துக்காக சிவப்பு விளக்கு பகுதிகள் செயல்படுவது போல உலகின் பல்வேறு நாடுகளில் விபச்சாரத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் விபச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் மறுப்பதற்கில்லை.
அந்தவகையில் திருமணமான ஆணோ, பெண்ணோ தனது துணையை தவிர மற்றவர்களுடன் உறவுகொள்வதற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 21 மாகாணங்களில் இதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
எனினும் விபச்சாரத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கு நியூ ஹாம்ஷையர் மாகாணம் முன்வந்துள்ளது. எனவே விபச்சாரத்துக்கு எதிரான 1791&ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்வது குறித்து அங்குள்ள மாகாண செனட்டில் ஓட்டெடுப்பு நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மை பெற்றால், அங்கு விபச்சாரத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிகிறது.மாகாண அரசின் இந்த முடிவுக்கு அங்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. சமூக கலாச்சார சீரழிவுக்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாக விளங்குவதாக, எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

0 comments:

Post a Comment