Breaking News
Loading...
Sunday 20 April 2014

Info Post
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஆபத்தானது எனக் கூறி அவற்றில் சில விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச விமான போக்குவரத்து தரத்திற்கு அமையதாக பழைய விமானங்களை இலங்கை விமானச் சேவை பயன்படுத்தி வருவதே இந்த தீர்மானத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
உதாரணமாக இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான 4- ஆர். ஏ.டி.ஏ. என்ற ஏ. 340 ரக விமானம் ஐரோப்பிய வான் பரப்பிற்குள் நுழைய அண்மையில் தடைவிதிக்கப்பட்டது.
24 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது பயணிகள் போக்குவரத்துக்கு உகந்தல்ல என்பதே இதற்கு காரணம்.
இந்த ரக விமானங்கள் 20 வருடங்கள் வரை மாத்திரமே பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும். அதன் பின்னர் அந்த விமானங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.
சர்வதேச விமான போக்குவரத்து அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த விமானங்களை இலங்கை போக்குவரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் மேற்படி விமானம் ஐரோப்பாவிற்குள் நுழைய தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் இந்த தடை காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதனைத் தவிர குறித்த விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான ஊதியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment