Breaking News
Loading...
Sunday 20 April 2014

Info Post
அமெரிக்காவின் வடக்கு மெக்சிகோ நகரத்தில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனர். 

தனியாருக்குச் சொந்தமான 'ஹாக்கர் 800' என்ற சொகுசு ஜெட் விமானம் ஒன்று மெக்சிகோ நகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள், இரண்டு திருமணமான தம்பதிகள், 10 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு மோசமான வானிலை காரணமாக பனிமூட்டம் அதிகமாக இருந்தது. 

வடக்கு மெக்சிகோவுக்கு அருகில் உள்ள சால்டிலோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்ட போது அங்கிருந்த கிடங்கின் மேற்கூரையில் மோதியது. மோதிய வேகத்தில் விமானத்தின் எரிபொருள் பகுதி சேதமடைந்ததால் விமானம் வெடித்து சிதறியது. விபத்துக்குள்ளான விமானம் சுமார் 400 மீட்டர்கள் தூரம் வரை சிறு சிறு துண்டுகளாக தரையில் சிதறி விழுந்தது. அதில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனால் ஏற்பட்ட தீயை அணைக்க 1 மணி நேரம் வரை ஆனதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். அவசரநிலை பணியாளர்கள் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் கருப்புப்பெட்டியையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

எனினும், விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவில்லை. ஆனால் மோசமான வானிலை விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment