Breaking News
Loading...
Sunday 20 April 2014

Info Post
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் ஏற்படும் மர்ம நோய் மக்களை பீதிக்குள் ஆழ்த்தி வருகிறது. 

கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது. 

மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்தநோய்த்தொற்று ஏற்பட்டால் விரைவாக சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் நேற்று இந்த நோய்க்கு பலியானதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி 2 வெளிநாட்டினர் உள்பட 12 பேர் இந்நோய்க்கான சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேரை பலி வாங்கிய இந்த மர்ம நோய்க்கு நேற்று வரை சவுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment