Breaking News
Loading...
Thursday 1 May 2014

Info Post
பெர்த்,
மாயமான விமானம் தொடர்பான மிகவும் எதிர்பார்க்கப்படும் முதற்கட்ட அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிகிறது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கப்பட்டது. விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை நாளை மலேசியா வெளியீடுகிறது.இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான்  தெரிவித்தார்.

0 comments:

Post a Comment