Breaking News
Loading...
Thursday 1 May 2014

Info Post
இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட ரயில் விபத்தில் குறைந்தது 70 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குருநாகல் மாவட்டம் பொத்துஹெர ரயில் நிலையித்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் வண்டி, மாத்தறை நோக்கிச் செல்லும் ரயில் மீது பொத்துஹெர ரயில் நிலையத்தில் மோதியது.
அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜரத ரெஜினா ரயில் வண்டி மீது கொழும்பிலிருந்து வந்த இண்டர் சிட்டி ரயில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குருநாலக மற்றும் பொல்ஹாவெலெ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பல பெட்டிகள் தடம் புரண்டு ரயில் பாதையின் இருபக்கமும் வீசி எறியப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் இராணுவம் மற்றும் காவல்துறையினருடன் ரயில்வே அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வடக்கிலிருந்து வரும் ரயில்கள் குருநாகலயிலும், தெற்கிலிருந்து செல்லும் பொல்ஹாவெல வரையிலுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment