Breaking News
Loading...
Thursday 1 May 2014

Info Post
அமெரிக்க மாநிலமான ஓக்லஹோமாவில் விஷ மருந்து கொடுத்து மரண தண்டனை நிறைவேற்ற அதிகாரிகள் எடுத்த முயற்சி, சரியாக சோதனை செய்யப்படாத மருந்துகள் அனுப்பப்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டு,மரண தண்டனைக் கைதி, வலியால் துடிதுடித்த சம்பவம் நடந்திருக்கிறது.

க்லேய்ட்டன் லாக்கெட் என்ற இந்த கைதி, முதல் முறை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்ட 20 நிமிடம் வரை கட்டுப்படுத்தமுடியாத வகையில் வலியால் உதறிக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
அவர் மருந்து செலுத்தப்பட்ட 40 நிமிடங்களுக்கும் மேல், மாரடைப்பால் இறந்தார் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநிலத்தின் குடியரசுக் கட்சி ஆளுநரான, மேரி பாலின், மரண தண்டனை நிறைவேற்றம் குறித்த நடைமுறைகளை முழுமையாக மறு பரீசலனை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், மற்றொரு கைதியின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்ற செலுத்தப்படும் மருந்துகளைத் தயாரிக்கும் பல ஐரோப்பிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நோக்கத்துக்காக இந்த மருந்துகளை விற்க மறுத்து வருவதை அடுத்து, அமெரிக்க மாநிலங்கள் இந்த மருந்துகளை வேறிடங்களிலிருந்து பெறுவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

0 comments:

Post a Comment