Breaking News
Loading...
Saturday 19 April 2014

Info Post

எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் இமயமலைப் பாதையில் இன்று திடீரென்று வீசிய பனிப்புயலில் சிக்கி நேபாள நாட்டை சேர்ந்த வழிகாட்டிகள் உள்பட 12 பேர் பலியானதாக, அந்நாட்டு சுற்றுலாத் துறை தகவல் வெளியிட்டது.
இது குறித்து நேப்பாளத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் கூறுகையில், "நேபாளத்தில் இன்று எதிர்ப்பாராத விதமாக பனிப்புயல் ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டதில் எவரெஸ்ட் சிகரத்தின் மேலே ஏற பயன்படுத்தப்படும் பாதையும் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதுவரையில் வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் உட்பட 12 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கிய மேலும் இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் பனிச்சரிவில் ஐந்து மலையேறும் பயிற்சி நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் சிக்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.
இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் ராணுவ வீரர்களும் மருத்துவர்களும் மீட்கப்பட்டோரை காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் முயற்சிகளுக்கு உகந்த கால நிலையாக இந்த பருவம் கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மலையேறிகளும் சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் பலியான வீரர்கள் கடந்த இரண்டு வாரங்களாக மலை அடிவாரத்தில் முகாம்கள அமைத்து, மலையேறும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment