Breaking News
Loading...
Thursday 17 April 2014

Info Post
சார்ஜா, ஏப். 17-

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணியின் துவக்க வீரர்களாக அகர்வால், முரளி விஜய் களமிறங்கினர். அகர்வால் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, அடுத்து வந்த மனோஜ் திவாரியும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிர்களை ஏமாற்றினார்.

அதன்பின்னர் முரளியுடன் இணைந்த டுமினி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய டுமினி, 44 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஆடிய டெய்லரும் அதிரடியாக ஆடி அரை சதத்தை நெருங்கினார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. டுமினி 67 ரன்களுடனும் (48 பந்துகள், 4 பவுண்டரி 3 சிக்சர்), டெய்லர் 43 ரன்களுடனும் (39 பந்துகள், 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்டேலும் மாடேன்சன்னும் களமிறங்கினர். தொடக்க வீரர் மாடேன்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கோலி, பட்டேலுடன் சேர்ந்து நிதனாமாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய பட்டேல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து இறங்கிய யுவராஜ்சிங், கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர். இறுதியில் பெங்களூர் அணி 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய யுவராஜ்சிங் 52 ரன்கலும், கேப்டன் விராட்கோலி 49 ரன்கலும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை யுவராஜ்சிங் தட்டிச்சென்றார்

0 comments:

Post a Comment