Breaking News
Loading...
Thursday 17 April 2014

Info Post
சியோல்,
தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.  இந்த கப்பலில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா செல்வதற்காக உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேர் இருந்துள்ளனர்.  நேற்று காலை அந்த கப்பல் கடலுக்குள் மூழ்க தொடங்கியது.  இதில் 6 பேர் பலியானார்கள்.
எஸ்.எம்.எஸ். செய்த மாணவன்
கடலுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதுவரை 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 291 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அரசு தரப்பில் பின்பு கூறப்பட்டது.  இந்நிலையில், கப்பல் கடலுக்குள் மூழ்கியபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் பெற்றோருக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி உள்ளனர்.
அது தென் கொரிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  அவற்றில் பரபரப்புடன் அதிகமாக பரவிய தகவல், ஒரு மாணவன் தனது தாய்க்கு அனுப்பி உள்ள எஸ்.எம்.எஸ். ஆகும்.  இதனை நான் அனுப்புகிறேன்.  மீண்டும் இதனை நான் கூற முடியாமல் போகலாம்.  அம்மா, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதாகும்.  ஷின் யங்-ஜின் என்ற மாணவன் அனுப்பிய இந்த குறுஞ்செய்தி அந்நாட்டு ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வா? சாவா?
அந்த மாணவன் பயணித்த கப்பல் நீருக்குள் மூழ்கி வாழ்வா? சாவா? போராட்டத்தில் அவனது நிலை இருப்பதை குறித்து அறியாத அந்த தாய், ஓ! நானும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்ற பதிலை தெரிவித்துள்ளார்.  அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட 179 பேரில் ஷின் ஒருவன்.  தென் கொரிய கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து நீருக்குள் மூழ்குவதற்கு முன்பாக இதுபோன்று பலர் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
கிம் வூங்-கி என்ற 16 வயது மாணவன் தனது சகோதரனிடம் அனுப்பியுள்ள செய்தியில், எனது அறை 45 டிகிரியாக உள்ளது.  எனது மொபைல் போன் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளான்.  பதிலுக்கு அனுப்பிய செய்தியில் உதவிக்கு தேவையான விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.  எனவே பயப்பட வேண்டாம்.  எனவே, வழக்கம்போல் உனது பணிகளை செய்து கொண்டிரு என்று சகோதரர் தெரிவித்துள்ளார்.
இறுதி செய்தி
ஆனால், அதன் பின்னர் அந்த தொடர்பு இல்லை.  காணாமல் போன 287 பேரில் கிம் ஒருவன்.  ஷின் என்ற 18 வயது மாணவி தனது தந்தைக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், டாடி, கவலைப்படாதீர்கள்.  நான் உயிர் காக்கும் உடையினை அணிந்து கொண்டிருக்கிறேன்.  மற்ற மாணவிகளுடன் தான் இருக்கிறேன்.  நாங்கள் கப்பலுக்குள் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, உடனடியாக வெளியே வர முயற்சி செய் என்று அவசரப்படுத்தி உள்ளார்.
ஆனால், அது வீணாகி போயுள்ளது.  அந்த மாணவி, டாடி, என்னால் முடியவில்லை.  கப்பல் கூட்டமாக உள்ளது.  ஹால்வே அதிக கூட்டமாக காணப்படுகிறது என்று தனது இறுதி செய்தியில் தெரிவித்துள்ளார்.  இது போன்று பலரும் தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு தகவல்களை பரிமாறியுள்ளதாக ஊடகங்களில் பரிதாபத்திற்குரிய செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment